03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வியாழன், செப்டம்பர் 13, 2018

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டரை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு!மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீளே வை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியின் ஆணையம் முடிவு செய்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியின் தலைமையிலான விசாரணை ஆணையம், நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறது. ஏற்கனவே விசாரணைக்கான காலம் முடியும் தருவாயில், அடுத்த மாதம் 24ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.

அப்போலோவில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், செவிலியர்கள், அவருடைய கார் டிரைவர், பாதுகாவலர் உள்பட பலரையும் விசாரணை ஆணையம் விசாரணை செய்தது. இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக லண்டனில் இருந்து வந்த டாக்டர் ரிச்சர்ட் பீளேவையும் விசாரணை ஆணையம் விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல்கள் வந்துள்ளன. அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்த விசாரணை இருக்கலாம் என்றும், விரைவில் டாக்டருக்கு சம்மன் அனுப்பப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் ஜி.சிகில்னானி, அஞ்சன்டிரிகோ, நிதிஷ் நாயக் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.