புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2018

காணாமல் போனோர் பணியகத்தின் இடைக்கால அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிப்பு!

காணாமல்போனோர் அலுவலகத்தின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது. பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான சர்வதேச தினமான ஓகஸ்ட் 30ஆம் திகதி இந்த அறிக்கையை வெளியிட முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த சந்தர்ப்பதில் ஜனாதிபதி பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்க நேபாளத்திற்கு பயணம் மேற்கொண்டிந்தார். எனவே, அவர் நாட்டில் இல்லாத காரணத்தால் அறிக்கை வெளியீட்டை பிற்போடுவதாக காணாமல்போனோர் தொடர்பான பணியகத்தின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்றைய தினம் குறித்த இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. அந்த இடைக்கால அறிக்கையில், இடைக்கால நீதி, நிவாரணம் உள்ளிட்ட அவசர பரிந்துரைகள் பல உள்ளடங்கியுள்ளதாக சாலிய பீரிஸ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

ad

ad