புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 செப்., 2018

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி – உச்சநீதிமன்றம்


பெண் கடவுள்களை வழிபடும் இந்திய நாட்டில் பெண்கள் பலவீனமானவா்கள் இல்லை என்று கருத்து தொிவித்துள்ள உச்சநீதிமன்றம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரையில் உள்ள பெண்களை அனுதிக்க கூடாது என்ற கேரளா தேசவம் போா்டு கடைபிடித்து வந்த நடடிக்கைகளுக்கு எதிராகவும், சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு அரசியல் சாசன அமா்விற்கு மாற்றம் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் குழு இந்த வழக்கை விசாரித்தது. இந்நிலையில் இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி கன்வில் கருடன் இணைந்து தீா்ப்பை வாசித்தாா். அப்போது, நீண்ட காலமாக பெண்கள் மீது பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது. சபரிமலை வழிபாட்டில் பெண்களுக்கு பாகுபாடு காட்டக்கூடாது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும். பெண் கடவுள்களை வணங்கும் நாட்டில் பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல என்று கருத்து தொிவித்த நீதிபதிகள், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

இதனைத் தொடா்ந்து நீதிபதி கன்வில்கருடன் இணைந்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அளித்த தீர்ப்பை ஏற்பதாக நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட் அறிவித்தனா். ஆனால் மற்றொரு நீதிபதியான இந்து மல்கோத்ரா இந்த வழக்கில் மாறுபட்ட தீா்ப்பை வழங்கினாா்.

இருப்பினும் 5 நீதிபதிகள் கொண்ட 4 அமா்வில் 3 அமா்வுகள் ஒரு தீா்ப்பையும், மற்றொரு அமா்வு 1 தீா்ப்பையும் வழங்கியதால் 3 அமா்வுகள் கொண்ட தீா்ப்பு இறுதி செய்யப்பட்டுள்ளது.

ad

ad