புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2018

ராஜீவ் காந்தி கொலை வழக்குத் தொடர்பில் தமிழக அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியதுராஜீவ் காந்தி கொலை வழக்குத் தொடர்பில் தமிழக அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்குத் தொடர்பில் தமிழக அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என ராஜாங்க அமைச்சர் ராதகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அரசாங்கம் பரிந்துரை செய்திருந்தது.

குறித்த ஏழு பேரையும் விடுதலை செய்யுமாறு தமிழக அரசு பரிந்துரை செய்தமையை தாம் வரவேற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.சென்னை பிரஸ் கிளப்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசாங்கத்தின் இந்த தீர்மானத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். தண்டனை அனுபவிப்போரில் இலங்கையர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

குறித்த இலங்கையர்கள் இந்தியாவில் தங்கியிருக்க வேண்டுமெனவும், நாடு திரும்புவது குறித்து இலங்கை அரசாங்கம் தீர்மானம் எடுக்கும் வரையில் காத்திருக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கண்டியில் பிறந்து இந்தியாவின் தமிழக மாநிலத்தின் முதல்வராக திகழ்ந்த மறைந்த எம்.ஜீ.ஆரின் 100ம் சிரார்த்த தின நிகழ்வுகளில் பங்கேற்குமாறு இந்திய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கும் நோக்கில் ராதகிருஸ்ணன் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்கள் இலங்கையில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ad

ad