புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2018

தமிழர்கள் அதிகாரப்பகிர்வைக் கோரவில்லை, சமஷ்டியையும் கொடுக்க முடியாது – மகிந்த திட்டவட்டம்

தமிழ் மக்கள் அதிகாரப் பகிர்வைக் கோரவில்லை என்றும், அரசியல்வாதிகள் தான் அதிகாரப் பகிர்வைக் கோருகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த மகிந்த ராஜபக்ச, நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்திருந்த செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் அதிகாரங்களைப் பகிர்ந்து தருமாறு கேட்கவில்லை. அரசியல்வாதிகள் தான் அதனைக் கோருகிறார்கள். தமிழ் மக்கள் வேலை வாய்ப்பு மற்றும் அபிவிருத்தியைத் தான் கேட்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர், ‘சிறிலங்கா சிறிய நாடு. நாங்கள் நாட்டை பிரித்து சமஷ்டித் தீர்வை வழங்க முடியாது. அதற்கான சாத்தியம் முற்றாக இல்லை.

நான் ஆட்சியில் இருந்த போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் என்னிடம் வந்து இது குறித்து பேசத் தயாராக இருக்கவில்லை.

ரணில் விக்கிரமசிங்க தமக்கு சிறந்த தீர்வை வழங்குவார் என அவர்கள் கருதினர்” என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ad

ad