புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2018

கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி


ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய 3-வது ஆட்டத்தில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

அதன்படி ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் முகமது ஷேசாத், ஜனத் ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறந்த துவக்கத்தை அளித்தனர். இதில் ஷேசாத் 34(47) ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ரஹ்மத் ஷா சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியின் ஸ்கோர் மெதுவாக உயர்ந்தது. பின்னர் ஜனத் 45(65) ரன்களும், கேப்டன் அஃப்கான் 1(5) ரன்னிலும் வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரஹ்மத் ஷா 72(90) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ஷாகிதி 37(52) ரன்களும், முகமது நபி 15(12) ரன்னிலும், ஷட்ரான் 12(14) ரன்னிலும், நயிப் 4(5) ரன்னிலும், ரஷித் கான் 13(6) ரன்னிலும், மிஷிபூர் ரகுமான் (0) ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அஃப்டாப் ஆலம் 7(2) ரன்களுடன் களத்தில் இருக்க, ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 249 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணியின் சார்பில் அதிகபட்சமாக திஷாரா பேரேரா 5 விக்கெட்டுகளும், தனஞ்ஜெயா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன் மூலம் இலங்கை அணிக்கு 250 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணியின் சார்பில், குசால் மெண்டிஸ் மற்றும் உபுல் தரங்கா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இதில் மெண்டிஸ் வந்த வேகத்திலே, ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். அதன்பிறகு களமிறங்கிய டி சில்வா 23(38) ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து குசால் பெரேரா 17(17) ரன்னிலும், உபுல் தரங்கா 36(64) ரன்னிலும், ஷேகான் ஜெயசூர்யா 14(28) ரன்னிலும், கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் 22(39) ரன்னிலும், ஷானாகா (0) ரன் ஏதும் எடுக்காமலும், தனஞ்ஜெயா 2(10) ரன்னிலும், இறுதியில் போராடிய திஷாரா பெரேரா 28 (36) ரன்னிலும், மலிங்கா 1(7) ரன்னிலும் வெளியேறினர்.

இறுதியில் இலங்கை அணி 41.2 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக முஜிப் உர் ரகுமான், நபி, நைப், ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 91 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றிபெற்றது.

ad

ad