புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 அக்., 2018


அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளுடன், மேலுமிரு அரசியல் கைதிகள், நேற்று (30) முதல் போராட்டத்தில் இணைந்துள்ளனர். இதையடுத்து, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை, 12 ஆக உயர்வடைந்துள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த புருசோத்தமன் அரவிந்தன், வவுனியாவைச் சேர்ந்த நல்லான் சிவலிங்கம் ஆகிய இருவருமே, நேற்று முதல் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று (01) முதல் தமது மருத்துவ உதவிகளையும் புறக்கணித்து, உண்ணாவிரதப் போராட்டத்தை முனைப்படையச்செய்ய அரசியல் கைதிகள் முடிவு செய்துள்ளனர். அது தொடர்பில் அவர்கள், உத்தியோகபூர்வமாக நேற்று, எழுத்துமூலம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு அறியத் தந்துள்ளனர். தமக்கான மருத்துவ உதவிகளைப் புறக்கணிக்க உள்ளதாக, சிங்கள மொழியில் எழுதி அவர்களால் ஒப்படைக்கப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் அவர்கள் தெரிவித்துள்ளர்.

ஒன்பது ஆண்டு காலமாக சிறைச்சாலைக்குள் வாடும் தம்மை, குறுகியகால மறுவாழ்வு வழங்கியாவது விடுவிக்குமாறு கோரி, தமிழ் அரசியல் கைதிகள், கடந்த 14ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மகசின் சிறைச்சாலையிலிருந்து வழக்குக்காக அநுராதபுரம் கொண்டு வரப்பட்ட 2 கைதிகளும் அவர்களுடன் இணைந்து போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

முன்னரும் பல தடவைகள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தமையால், அவர்களது உடல் நிலை மிகப் பலவீனமான இருப்பதாக, மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் மருத்துவ உதவிகளையும் சேலைனையும் பெற்றுக் கொள்வதையும் அவர்கள் தவிர்க்கவுள்ளனர்.

ad

ad