புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 அக்., 2018

107 எல்.ரி.ரி.ஈ. கைதிகள் தொடர்பில் ஜனாதிபதி இன்று விசேட அறிவிப்பு

சிறைப்படுத்தப்பட்டுள்ள 107 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்வதா? அல்லது
அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்வதா? என்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) அறிவிப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த புலிகள் அமைப்பு கைதிகள் தொடர்பில் கண்டறிவதற்கு தமிழீழ கோரிக்கையாளர்களின் திரைப்பட இயக்குனர் பாரதி ராஜா உட்பட ஒரு குழுவினரும் யாழ். பல்கலை மாணவர்களுடன் இணைந்து யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரம் வரை வந்த நடைபவணியில் கலந்துகொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
சிறையில் வைக்கப்பட்டுள்ள அனைவரும் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் என அரச தரப்பு உயர் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக் கைதிகளில் உள்ள மூன்று பேர் 55 பயணிகளுடன் சென்ற விமானத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டவர்கள் எனவும் கூறப்படுகின்றது. அத்துடன், 24 இராணுவ வீரர்களை கொலை செய்து எரித்த யுத்தக் குற்றச் சாட்டுக்கு உள்ளானவர்களும் இவர்களில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad