புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 அக்., 2018

புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளி விபரம்-யாழ்ப்பாணம், தமிழ்-164


2018 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், வெட்டுப்புள்ளி விபரங்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய, அதி கூடிய வெட்டுபுள்ளியாக சிங்கள மொழிக்கு 168 உம், தமிழ் மொழிக்கு 165 என குறிப்பிடப்பட்டுள்ள அதேவேளை, வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு குறைந்தளவான வெட்டுப்புள்ளிகள் அறிவிக்கப்பட்டிருப்பதனை அவதானிக்கலாம்.

மாவட்டங்களின் அடிப்படையில் வெட்டுப்புள்ளி விபரங்கள் வருமாறு:


சிங்களம்:- கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, மாத்தறை, குருநாகல், கேகாலை,காலி (168)

தமிழ்:- கொழும்பு, கம்பஹா, களுத்துறை,கண்டி, மாத்தளை,காலி,மாத்தறை,குருநாகல்,கேகாலை(165)

சிங்களம்:- நுவரெலியா 163 தமிழ் 162,ஹம்பாந்தோட்டை சிங்களம் 166, தமிழ் 160, யாழ்ப்பாணம், தமிழ்-164, கிளிநொச்சி தமிழ்-163,மன்னார் தமிழ்-162,வவுனியா-சிங்களம் 158,தமிழ் 164, முல்லைத்தீவு சிங்களம்-158,தமிழ்-163, மட்டக்களப்பு தமிழ்-164, அம்பாறை சிங்களம் 164, தமிழ் 163, திருகோணமலை சிங்களம் 163, தமிழ் 162, புத்தளம் சிங்களம்-165,தமிழ் 162, அநுராதபுரம்,பொலன்னறுவை சிங்களம்-165, தமிழ் 162, பதுளை சிங்களம்-165, தமிழ் 163,​ மொனராகலை சிங்களம்- 165, தமிழ் 162, இரத்தினபுரி சிங்களம்- 166, தமிழ் 162.

ad

ad