புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 அக்., 2018

4 தமிழர்களுக்கு 10 வருட சிறைத்தண்டனை

2008ஆம் ஆண்டு கண்டி- பொல்கொல்ல பிரதேசத்தில் பயணிகள் பஸ் வண்டி ஒன்றின் மீது குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு, 3 பேர் பலியான சம்பவம் தொடர்பில், சதித்திட்டம் தீட்டியமை, நிதியுதவி வழங்கினார்கள் என்று குற்றஞ்சமத்தப்பட்டுள்ள 4 குற்றவாளிகளுக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் 10 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளதுடன், இதனை 5 வருடங்களில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டப் போது, நீதிமன்றில் ஆஜராகி குறித்த குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, சந்தேகநபர்களுக்கு 10 வருட சிறைத்தண்டனை தீர்ப்பளித்த நீதிபதி அதை 5 வருடங்களில் அனுபவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன்,குற்றவாளிகளிடம் 25,000 ரூபாய் அபராதப் பணமும் விதிக்கப்பட்டுள்ளது

ad

ad