ஞாயிறு, அக்டோபர் 28, 2018

இலங்கை நிலவரம் குறித்து பல மணி நேர மௌனத்தின் பின் இந்தியா கருத்து

இலங்கையில் திடீர் அரசியல் மாற்றங்கள் இடம்பெற்று பல மணிநேரத்தின் பின்னர் இலங்கை நிலவரம் குறித்து  இந்திய
வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர் ரவீஸ் குமார் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தியா இலங்கையில் நடைபெறும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக நாடு என்ற அடிப்படையிலும் நெருங்கிய அயல்நாடு என்ற அடிப்படையிலும் இலங்கையில் ஜனநாயக விழுமியங்களும் அரசமைப்பு நடைமுறையும் பின்பற்றப்படும் என எதிர்பார்க்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களிற்கு எங்களது அபிவிருத்தி உதவிகளை தொடர்ந்தும் வழங்குவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்