ஞாயிறு, அக்டோபர் 28, 2018

விடுமுறை இரத்து; அமைதியை நிலைநாட்ட உத்தரவு

அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
நாட்டில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், மீள அறிவிக்கும் வரை குறித்த உத்தரவு அமுலில் இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தங்களுக்கு பொறுப்பான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சமாதானத்தை நிலை நாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, சகல சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பிரிவுக்கு பொறுப்பான அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் பொலிஸ்மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.