புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 அக்., 2018

வவுனியாவை வந்தடைந்த அரசியல் கைதிகளின் விடுதலைக்கான பல்கலை மாணவர்களின் நடைபவனி

அரசியல் கைதிகளின் விடுதலையை முன்நிறுத்தியும் அவர்களின் விடுதலைக்கு ஒரு தீர்க்கமான தீர்வினைப் பெற்றுத்தருமாறும் கோரி
பல்கலைகழக மாணவர்களினால் ஆரம்பமான நடைபவனிக்கு வவுனியாவில் அமோக வரவேற்பு அளித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரத்திலுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்களினால் ஆரம்பமான நடைபவணி நேற்று இரவு 3ஆவது நாட்களில் ஓமந்தையை வந்தடைந்தது.
 4ஆவது நாளான இன்று காலை ஓமந்தையிலிருந்து வவுனியா தாண்டிக்குளத்தில் வைத்து அமோக வரவேற்பு அளிக்கப்பட்டு வவுனியா நகருக்கு நடைபவனி அழைத்துச் செல்லப்பட்டு பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த பாடசாலை மாணவர்கள் நடைபவனியினருக்கு அமோக வரவேற்பு அளித்துள்ளனர். 
அரசியல் கைதிகளின் விடுதலையை முன்நிறுத்தியும் அவர்களின் விடுதலைக்கு ஒரு தீர்க்கமான தீர்வினைப் பெற்றுத்தருமாறும் கோரிய நடைபவனி நேற்றைய தினம் மாங்குளம் வந்தடைந்தது.
 அரசியல் கைதிகளின் விடுதலைக்காக போராட்டம் 9ஆம் திகதி யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டு நடைபவனியாக கிளிநொச்சி, மாங்குளம், ஊடாக நேற்று இரவு வவுனியா ஓமந்தையை வந்தடைந்து இன்று காலை வவுனியாவிலிருந்து அனுராதபுரம் சிறைச்சாலையை நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளது.
வடமாகாணசபை உறுப்பினர்களான ப. சத்தியலிங்கம், ம. தியாகராசா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம், வவுனியா வர்த்தகர் சங்கம், பொது அமைப்புக்கள், வவுனியா வர்த்தகர் நலன்புரிச்சங்கம், உள்ளூர் விளைபொருள் விற்பனையாளர் சங்கம், வவுனியா மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு அனுராதபுரம் சிறையிலுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய கோசங்களை எழுப்பியவாறு ஆரம்பமான நடைபவனிக்கு ஆதரவு வழங்கியிருந்தனர். 
இதையடுத்து வவுனியா நகரிலிருந்து காலை 10.45மணியளவில் அனுராதபுரத்தினை நோக்கி நடைபவனி புறப்பட்டது.

ad

ad