www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

செவ்வாய், அக்டோபர் 30, 2018

செல்பி விவகாரம்: மன்னிப்புக் கேட்டார் சிவக்குமார்

மதுரையில் நடந்த ஒரு திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிவக்குமார் செல்பி எடுத்த ரசிகர் ஒருவரின் கைப்பேசியை தட்டி
விட்டதற்கு மக்களிடமிருந்து கண்டனங்கள் தொடர்ந்து எழுந்த வண்ணமுள்ள நிலையில் அவர் தமது செயலுக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
சிவக்குமார் செல்பி எடுத்த இளைஞரின் கைப்பேசியை வேகமாக  தட்டிவிட்ட காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதால், சிவகுமாரை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக ஏற்கனவே விளக்கம் அளித்துவிட்ட சிவக்குமார் சற்று முன் தமது செயலுக்காக வருத்தப்பட்டு மன்னிப்புக் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக தமது பேஸ்புக்கில் காணொளி வெளியிட்டுள்ள சிவக்குமார் “ஆர்வம் மிக்க ரசிகர்கள் கட்டுக்கடங்காத கூட்டத்தில் அப்படித்தான் உணர்ச்சி வசப்பட்டு நடந்து கொள்வார்கள்.ஒரு பிரபல கலைஞன் அதையெல்லாம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
என்ன இருந்தாலும் சிவகுமார் செல்போனை தட்டி விட்டது தவறு என்று பெருவாரியான மக்கள் நினைக்கும் பட்சத்தில் என் செயலுக்கு உளப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். I’m very sorry!” என சிவக்குமார் பதிவிட்டுள்ளார்.