புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 அக்., 2018

நாமலின் சித்தபாவுக்கு பங்குள்ளது ; இனப் படுகொலை விடயத்தில் எவரும் தப்ப முடியாது

இனப்படுகொலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ்வின் சித்தப்பாவுக்கும் பங்கு இருக்கின்றது.
எமது மக்கள் 40 இலட்சம்பேரை கொலை செய்தவர். அதனால் இந்த விவகாரத்தில் இவர்களுக்கு சுத்தமாக முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மேலும் 2002ஆம் ஆண்டு ரணில் பிரபா ஒப்பந்தம் மூலம் அந்த காலப்பகுதியில் வெடிச்சத்தம் ஒன்றும் கெட்கவில்லை. அப்படியானால் யுத்தம் முடிவடைந்து இத்தனை வருடங்கள் கடந்தும் ஏன் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாமல் இருக்கின்றது? .
இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தாதவரை நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது. அதனால் பலருடங்களாக சிறைச்சாலைகளில் இருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசியல் தலைவர்கள் இதய சுத்தியுடன் செயற்பட முன்வரவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதாரம் குறித்து மக்கள் விடுதலை முன்னணி மற்றும் பொது எதிரணி இணைந்துகொண்டுவந்த சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

ad

ad