புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 அக்., 2018

தோற்றது பெயார்ண்; வென்றது டொட்டமுண்ட்

Views - 8

ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், நேற்று  இடம்பெற்ற போட்டிகளில்
, நடப்பு புண்டெலிஸ்கா சம்பியன்களான பெயார்ண் மியூனிச் தோல்வியடைந்த நிலையில், பொரூசியா டொட்டமுண்ட் வென்றது.
தமது மைதானத்தில் இடம்பெற்ற பொரூசியா மொச்சென்கிளட்பா அணியுடனான போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் பெயார்ண் மியூனிச் தோல்வியடைந்திருந்தது. பொரூசியா மொச்சென்கிளட்பா சார்பாக, அலஸானே பிளியா, லார்ஸ் ஸ்டின்டில், பற்றிக் ஹேர்மன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர்.சுவிஸ்  நாட்டுக்கான  பந்துக்காப்பாளரான சம்மர்  மோன்சன் கிலப்பாக் அணி பந்துக்கப்பாளாராக களமாடி பயேனின்  உன்னத உதை களை தடுத்தாண்டு தனது கழகத்துக்கு வெற்றி பெற காரணமாக இருந்தார் அத்தோடு மேலும்2 சுவிஸ் வீரர்களும் (எல் வெடி சகாரியா )அங்கம்  வகித்தாடினர் பயிட்சியாளர்  பாவரியும் சுவிஸ் நாடடவரே
இந்நிலையில், தமது மைதானத்தில் நடைபெற்ற எப்.சி அகஸ்பேர்க் அணியுடனான போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் பொரூசியா டொட்டமுண்ட் வென்றது. பொரூசியா டொட்டமுண்ட் சார்பாக, பக்கோ அல்கேஸர் மூன்று கோல்களையும் மரியோ கோட்ஸே ஒரு கோலைப் பெற்றதோடு, எப்.சி அகஸ்பேர் சார்பாக, அல்பேர்ட் பின்பொகோஸன், பிலிப் மக்ஸ், மைக்கல் கிரேகொரிட்ச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர்.
அந்தவகையில், புண்டெலிஸ்கா புள்ளிகள் பட்டியலில் 17 புள்ளிகளைப் பெற்றுள்ள பொரூசியா டொட்டமுண்ட் முதலிடத்தில் காணப்படுகின்ற நிலையில், 13 புள்ளிகளைப் பெற்றுள்ள பெயார்ண் மியூனிச் ஐந்தாமிடத்தில் காணப்படுகின்றது.

ad

ad