www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

திங்கள், அக்டோபர் 29, 2018

நாட்டின் அரசியலமைப்பின் இறைமை பாதுகாக்கப்படவேண்டும்

நாட்டின் அரசியலமைப்பின் இறைமை பாதுகாக்கப்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.
சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் பதவியில் ஏற்பட்ட மாற்றத்தினையடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை குறித்து சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சபாநயகர் என்ற வகையில் எமது நாட்டினது அரசியலமைப்பின் மேலாதிக்கத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதன் இறைமை பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.