சனி, அக்டோபர் 27, 2018

அமைச்சரவையை மாற்றுவதற்குறிய அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு

அமைச்சரவையை மாற்றுவதற்கு அல்லது அதன் செயற்பாடுகளை மாற்றுவதற்குறிய அதிகாரம் ஜனாதிபதிக்கு
உண்டு எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி சட்டத்தரணி மனோகரத சில்வா, புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் நியமனம் சட்டபூர்வமான முறையில் இடம்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமனம் செய்யப்பட்டமை, ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற செயற்பாட்டுக்கு ஒப்பானது என, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி.சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.