புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 அக்., 2018

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை: ஜனாதிபதியுடன் சம்பந்தன் பேச்சுவார்த்தை


தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

தமது விடுதலையை வலியுறுத்தி எட்டு தமிழ் அரசியல் கைதிகள் இன்று (புதன்கிழமை) 20வது நாளாகவும் அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதமிருந்து வருகின்றனர்.

அவர்களது விடுதலைக்கு பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், அவர்களில் இருவரை புனர்வாழ்வளித்து விடுதலை செய்யவும், மூவரின் வழக்குகளை துரிதப்படுத்தி சாதகமான நகர்வுகளை முன்னெடுக்கவும் முடியுமென அரசாங்கம் கூறியுள்ளது.

எனினும், ஏனைய மூவரையும் விடுவிக்க முடியாதெனவும் தெரிவித்துள்ளது.

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் இலங்கையில் அனைத்து சிறைகளிலும் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்தும் நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ. சுமந்திரன், நீதியமைச்சர் தலதா அதுக்கோரள மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இந்த பேச்சுவார்த்தையின் போதே, அரசாங்கம் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தது.

இவ்வாறான ஒரு நிலையில், தண்டனை பெற்றுள்ள அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் பேரில் விடுதலை செய்வது குறித்து எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் இன்று ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad