புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 அக்., 2018

ஜனாதிபதி அழைத்தும் நாடு திரும்பாத தூதுவர்

ஒஸ்ட்ரியா நாட்டின் இலங்கைக்கான தூதுவர் பிரியானி விஜேசேகரவை மீண்டும் இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
உத்தரவிட்டும் பிரியானி விஜேசேகர இன்னும் நாடு திரும்பவில்லையெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் ஒஸ்ட்ரியாவில் அமைந்துள்ள இலங்கைத் தூதுவராலயத்துக்கு பலமுறை தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட நிலையில், ஜனாதிபதியின் தொலைபேசி அழைப்புக்கு குறித்த அலுவலகத்தில் யாரும் பதிலளிக்கவில்லை.
இதனையடுத்து, ஒஸ்ட்ரியாவுக்கான இலங்கைத் தூதுவர் உள்ளிட்ட அதிகாரிகளை உடனடியாக நாடு திரும்புமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.
ஒஸ்ட்ரியாவில் அமைந்துள்ள இலங்கைத் தூதுவராலம் ஊடாகவே பொஸ்னியா, சேர்பியா, ஸ்லோவாக்கியா ஆகிய பல நாடுகளுடனான தொடர்புகள் முன்னெடுக்கப்படுவதால், முக்கியமான பணிகளை முன்னெடுக்கும் தூதுவராலயத்தில் பல மணி நேரமாக தொலைபேசி அழைப்பொன்றுக்கு பதிலளிக்க யாரும் இல்லையென்பது பிரச்சினைக்குரிய விடயமென்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளை  தற்போது வெளிநாட்டமைச்சில் பணிபுரியும் பல அதிகாரிகள் போலாந்து, சுவீடன், கனடா மற்றும் வொஷிங்டனிலுள்ள இலங்கைத் தூதுவராலயங்களின் பதவிகளுக்காக நியமிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad