புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 அக்., 2018

சி.எஸ்.கே.ஏ மொஸ்கோவிடம் தோற்றது றியல் மட்ரிட்

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரில், ரஷ்யக் கழகமான
சி.எஸ்.கே.ஏ மொஸ்கோ அணியின் மைதானத்தில் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான குழு ஜி போட்டியில் சம்பியன்ஸ் லீக்கின் நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட் தோற்றது.
குறித்த போட்டியில், றியல் மட்ரிட்டின் மத்தியகள வீரரான டொனி க்றூஸ் மோசமான முறையில் பந்தை பின்நோக்கி நகர்த்தியபோது பந்தைக் கைப்பற்றிய சி.எஸ்.கே.ஏ மொஸ்கோ அணியின் நிகொலா விளாசிச் போட்டியின் இரண்டாவது நிமிடத்திலேயே பெற்ற கோலின் காரணமாகவே இறுதியில் 0-1 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் தோற்றது.
இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற ஸ்பானிய லா லிகா கழகமான வலென்சியாவுடனான குழு எச் போட்டியொன்றை 0-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் சமநிலையில் முடித்துக் கொண்டது.
இந்நிலையில், தமது மைதானத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற நெதர்லாந்துக் கழகமான அஜாஸுடனான குழு ஈ போட்டியை ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பெயார்ண் மியூனிச் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடித்துக் கொண்டது. பெயார்ண் மியூனிச் சார்பாகப் பெறப்பட்ட கோலை மற் ஹம்மெல்ஸ் பெற்றதோடு, அஜாக்ஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை நூஸைர் மஸ்ரயோயி பெற்றார்.
இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற செக் குடியரசின் விக்டோரியா பில்ஸின்யுடனான குழு ஜி போட்டியொன்றில் 5-0 என்ற கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான றோமா வென்றது. றோமா சார்பாக, எடின் டெக்கோ மூன்று கோல்களையும் சென்கிஸ் அன்டர், ஜஸ்டின் குளூவேர்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.
இந்நிலையில், தமது மைதானத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சுவிற்ஸார்ந்துக் கழகமான யங் போய்ஸுடனான குழு எச் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸ் வென்றது. ஜுவென்டஸ் சார்பாகப் பெறப்பட்ட மூன்று கோல்களையும் போலோ டிபாலா பெற்றிருந்தார்.
இதேவேளை, ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான 1899 ஹொபென்ஹெய்ம் அணியின் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அவ்வணியுடனான குழு எவ் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி வென்றது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக, சேர்ஜியோ அகுரோ, டேவிட் சில்வா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, 1899 ஹொபென்ஹெய்ம் அணி சார்பாகப் பெறப்பட்ட கோலை இஷாக் பெல்பொடில் பெற்றிருந்தார்.

ad

ad