புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 அக்., 2018

வடக்கு மஹாவலி திட்டம் – உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் மஹாவலி எல் வலயத் திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று (03) மாலை,பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற வடக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணிக் கூட்டத்திலேயே மேற்படி உத்தரவை ஜனாதிபதி விடுத்துள்ளார்.

கடந்தமுறை நடைபெற்ற செயலணிக் கூட்டத்தில் மஹாவலி தொடர்பில் எதுவித மாற்றுக் குடியேற்றங்களும் இல்லையென ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஓகஸ்டில் வழங்கப்பட்ட மீன்பிடி அனுமதிகள் மற்றும் குடியேற்றம் சம்பந்தமான ஆதாரங்களைச் சமர்ப்பித்த சுமந்திரன், இவற்றை உடனடியாகத் தடைசெய்ய வேண்டுமென ஜனாதிபதியிடம் கோரியிருந்தார்.

இதன்போது, மஹாவலி எல் திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள ஜனாதிபதி, வடக்கில் மேற்கொள்ளப்படும் மஹாவலித் திட்டங்களை உடனடியாக நிறுத்தும்படி, திட்டப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார் என சுமந்திரன் எம்.பி. மேலும் தெரிவித்தார்.


சிங்களக் குடியேற்றங்கள் நடந்ததை ஏற்ற மைத்திரி

அவர் அனுமதி இன்றி பணிகளை முன்னெடுக்கவும் தடை


மகா­வலி அபி­வி­ருத்தி அதி­கார சபை­யின் ஊடாக முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் காணி­கள் வழங்­கி­யமை எனக்­குத் தெரி­யாது. உட­ன­டி­யாக அங்கு முன்­னெ­டுக்­கப்­ப­டும்

அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் நிறுத்­த­வும். இவ்­வாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்­ளார்.
வடக்கு – கிழக்கு மாகாண அரச தலை­வர் சிறப்­புச் செய­ல­ணி­யின் கூட்­டம் அரச தலை­வர் செய­ல­கத்­தில் நேற்று மாலை இடம்­பெற்­றது. இந்­தக் கூட்­டத்­தி­லேயே மேற்­படி விட­யம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் தமிழ் மக்­க­ளுக்­குச் சொந்­த­மான காணி­கள், மகா­வலி எல் வல­யத்­தி­னால் அப­க­ரிக்­கப்­பட்டு பெரும்­பான்­மை­யின மக்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கின்­றது. இந்த விட­யத்தை கடந்த கூட்­டத்­தில் சுட்­டிக்­காட்­டி­ய­போது, அப்­படி எது­வும் நடக்­க­வில்லை என்று நீங்­கள் (அரச தலை­வர்) தெரி­வித்­தி­ருந்­தீர்­கள். ஆனால் நீங்­கள் பொறுப்­பாக இருக்­கின்ற மகா­வலி அபி­வி­ருத்தி அதி­கார சபை­யின் ஊடாக காணி அனு­ம­திப் பத்­தி­ரம் வழங்­கப்­பட்­டுள்­ளது என்று தெரி­வித்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன், அதற்­கான ஆதா­ரத்­தை­யும் காண்­பித்­தார்.
இதன்­போது அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கூறு­வது சரி என்­றும், தனக்­குத் தெரி­யா­மல் இது வழங்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் குறிப்­பிட்­டுள்­ளார். இந்­தச் செயற்­பாடு உட­ன­டி­யாக நிறுத்­தப்­பட வேண்­டும் என்­றும், எந்­த­வொரு கார­ணத்­துக்­கா­க­வும் அனு­ம­திப் பத்­தி­ரம் வழங்­கப்­ப­டக் கூடாது என்­றும் அரச தலை­வர் உட­ன­டி­யா­கவே பணிப்­புரை விடுத்­துள்­ளார்.
மகா­வலி அபி­வி­ருத்தி அதி­கார சபை­யின் பணிப்­பா­ளர், நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ள­மை­யி­னா­லேயே காணி உரி­மப் பத்­தி­ரம் வழங்­க­வேண்­டிய தேவை ஏற்­பட்­ட­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார். அந்த வழக்கு மீளப் பெறப்­பட வேண்­டும் என்­பதை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரன் குறிப்­பிட்­டுள்­ளார்.
மகா­வலி எல் வல­யம் தொடர்­பில், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பு­டன் பேச்சு நடத்தி முடிவு எடுக்­கும் வரை­யில் எந்­த­வொரு நட­வ­டிக்­கை­க­ளும் எடுக்­க­வேண்­டாம் என்று அர­ச­த­லை­வர் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளார்.

ad

ad