புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 அக்., 2018

வத்தளையில் இலஞ்சம் வாங்கிய கிராம உத்தியோகத்தர் கைது

வத்தளை பிரதேசத்தில் பெண்ணொருவரிடமிருந்து இலஞ்சம் பெற்ற கிராம உத்தியோகத்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வத்தளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட  இலக்கம் 109 ஹேக்கித்த கிராம உத்தியோகத்தர் பிரிவில் கடமையாற்றும், கிராம உத்தியோகத்தர் ஒருவரே , 6000 ரூபாய் இலஞ்சம் பெற்றக் குற்றச்சாட்டில் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளாரென,  இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் பிரியந்த சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
வத்தளைப் பிர​தேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவரின் வதிவிடத்தை உறுதிப்படுத்துவதற்காக குறித்த கிராம உத்தியோகத்தரிடம் சென்றப் போதே, சந்தேகநபர் பெண்ணிடம் இலஞ்ச பணத்தைக் கோரியுள்ளார்.
இதனையடுத்து குறித்தப் பெண் வழங்கிய முறைபாட்டையடுத்து, சந்தேகநபர் இன்றைய தினம் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் பணத்தை வாங்க முற்படுகையில் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக, பிரியந்த சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

ad

ad