www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

செவ்வாய், அக்டோபர் 30, 2018

ஐ.தே.க ஆர்ப்பாட்டத்துக்கு இடைக்கால தடை

ஐக்கிய தேசியக் கட்சி, கொழும்பு-03 கொள்ளுப்பிட்டிய பகுதியில் இன்று (30) முன்னெடுக்கவிருக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு இடைக்கால
தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ​மேலதிக நீதவான் பிரியந்த லியனகே மேற்கண்டவாறு இடைக்கால தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
ஐ.தே.கவின் ​பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்டவர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த இடைக்கால தடையுத்தரவின் பிரகாரம் அரச பகுதிகளுக்கு நுழைய முடியாது.
மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில், ​ஆர்ப்பாட்டத்தை நடத்துவது மற்றும் மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளல் ஆகியன இந்த இடைக்கால தடையுத்தரவின் கீழ் தடைச்செய்யப்பட்டுள்ளது.
கறுவாத்தோட்டப் பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமையவே, கொழும்பு மேலதிக நீதவானினால் இந்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.