புதன், அக்டோபர் 24, 2018

தென்கொரிய மாநாட்டில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

இராணுவமயமாக்கலிற்கு எதிரான சர்வதேச மனித உரிமையாளர்கள் மக்கள்
செயல்பாட்டாளர்கள் மற்றும் கல்வியலாளர்கள் பங்குபற்றிய கருத்தரங்கில் தமிழர்களை பிரதிந்தித்துவப்படுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள்  உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்துகொண்டார்.
இக்கருத்தரங்கு கடந்த 20 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை தென்கொரியாவில் நடைபெற்றது. இராணுவமயமாக்கலையும் ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்தல், புனிதம் மிக்க எம் தாய்நிலத்தினையும் எம் கடலையும் எம் உயிர்ப்பையும் மீள கோருதல் எனும் தொனிப்பொருளில் தென்கொரிய தலைநகர் சியோலில் நடக்கின்ற சர்வதேச கருத்தரங்கு தொடரில் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டார்.
இதில் பலஸ்தீனம், காஷ்மீர், மியன்மார், இந்தோனேசியா, தென் கொரியா, துருக்கி, தாய்லாந்து, ஜோர்டான், பசுபிக் தீவுகள், மேற்கு பப்புவா நியுகினி போன்ற நாடுகளின் மக்கள் செயல்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.