புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 அக்., 2018

றோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு மற்றும் பகுப்பாய்வுகளுக்கான
அமைப்பு (Research and Analysis Wing – RAW ) கொலை செய்வதற்கு சதிசெய்வதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
இந்தத் தகவல் இலங்கையின் அரசியலில் மட்டுமல்ல இந்தியாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த செய்வாக்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்தில் உரையாற்றும் போது மைத்திரிபால சிறிசேன இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். இந்தத் தகவலை முதல் முதலாக கொழும்பிலிருந்து வெளிவரும் எக்கநொமிநெக்ஸ்ட் (economynext.com) இணையத்தளத்திலேயே வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து வெளிவரும் இந்து பத்திரிகையிலும் வெளியாகியிருந்தது. இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியதைத் தொடர்ந்துஜனாதிபதி மைத்ரிபாலவின் ஆலோசகர் சிரால்லக்திலக அதனை மறுத்திருப்பதுடன்ஜனாதிபதி றோவின் பெயரை குறிப்பிடவில்லை.
அவர் பொதுவாக நாடுகளின் இரகசிய அமைப்புக்கள் (secret services)  தலைவர்களை கொலைசெய்வதற்கு முயற்சிப்பதுண்டு. இது அமெரிக்காவிலும் கூட நடப்பதுண்டு. ஆனால் இவ்வாறு கூறியிருக்கும் சிரால்லக்திலகமேலும் ஜனாதிபதி இதனை இந்திய பிரதமர் அறிந்திருக்காமல் இருக்கக் கூடும் என்று குறிப்பிட்டதாகவும் தெரிவித்திருக்கின்றார். ஜனாதிபதி மைத்திரிபால றோவை மனதில் எண்ணவில்லையாயின் பின்னர் எதற்காக இந்திய பிரமதர் இதனை அறிந்திருக்காமல் இருக்கக் கூடுமென்று கூற வேண்டும்இந்தியாவில் றோவையும் மிஞ்சிய உளவு அமைப்புக்கள் இருக்கின்றனவாசிரால்லக்திலகவின் தடுமாற்றத்திலிருந்து மைத்திரிபால சிக்கலான ஒரு விடயத்தை கூறிவிட்டார் என்பது உறுதியாகிறது. ஆனால் குற்றச்சாட்டுக்கான அடிப்படைகள் தொடர்பில் எந்தவொரு ஆதாரத்தையும் ஜனாதிபதி வெளிப்படுத்தவில்லை.
சிறிலங்காவின் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க புதுடில்லிக்கு செல்லவிருந்த நிலையிலேயே மைத்திரிபால இவ்வாறானதொரு குற்றச்சாட்டை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். மைத்திரிபாலவின் குற்றச்சாட்டு இந்திய – சிறிலங்கா உறவில் விரிசலை ஏற்படுத்தக் கூடிய ஒன்று. இதற்கிடையில் அமைச்சரவை கூட்டத்தில் இந்தியாவின் திட்டங்கள் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் போது கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பில் மைத்திரிபால எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறார். இந்த விடயங்கள் தொடர்பில் அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக் கொண்டு புதுடில்லி செல்லும் நோக்கிலேயே ரணில் காய்களை நகர்த்தியிருக்கின்றார். ஆட்சி மாற்றத்தின் பன்னர் இந்தியாவினால் முன்மொழியப்பட்ட திட்டங்கள் தொடர்ந்தும் இழுபறி நிலையில் இருந்துவருகின்ற நிலையிலேயே தற்போது கூட்டரசாங்கத்திற்குள் இந்தியா தொடர்பில் ரணிலுக்கும் மைத்திரிபாலவுக்கும் இடையில் முரண்பாடுகள் தீவிரமடைந்திருக்கின்றன.
இதிலுள்ள சுவார்ஸ்சயமான பக்கம் தொடர்பிலேயே இந்த பத்தி கவனம் செலுத்துகின்றது. 2015ஜனவரியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது உடனடியாகவே மகிந்த ராஜபக்ச இந்திய உளவுத்துறையான றோவின் மீது குற்றம் சாட்டியிருந்தார். முதலில் இந்திய உளவுத்துறையின் மிது குற்றம்சாட்டியிருந்த மகிந்த பின்னர் அமெரிக்க உளவுத்துறையான சி.ஜ.ஏ மற்றும் பிரித்தானிய உளவுத்றையான எம்.ஜ.6 ஆகியவற்றின் மீதும் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இதற்கும் ஒரு தொடர்புமில்லை. அவர் இதனை அறிந்திருக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். 
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்று வருடங்கள் முடிவடையவுள்ள நிலையில் எவரை றோ ஆட்சிக்கு கொண்டுவந்ததாகச் சொல்லப்பட்டதோ தற்போது அவர் தன்னை றோ கொலை செய்வதற்கு சதி செய்வதாக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றார். அவரும் மகிந்தவைப் போலவே இதனை இந்திய பிரதமர் அறியாமல் இருந்திருக்கக் கூடுமென்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.
ஜனாதிபதிபோத்தபாய ராஜபக்ச போன்றவர்களை கொல்லுவதற்கான சதி முயற்சியொன்று இடம்பெற்றுவருவதாக அண்மையில் சில செய்திகள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த விசாரணகைளின் போது கேரளாவைச் சேர்ந்த இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகிருந்தன.
பின்னர் அவர் மனநோயால் பாதிக்கபட்ட ஒருவர் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன. இவ்வாறான செய்திகளின் பின்னணியில்தான் தன்னை றோ கொலை செய்ய சதிசெய்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக குற்றம்சாட்டியிருக்கிறார். சிங்கள தேசியவாத உணர்வை பற்ற வைப்பதில் இவ்வாறான பரபரப்புக்கள் உண்மையிலேயே செல்வாக்குச் செலுத்தக் கூடியவைதான்.
இவ்வாறு றோவின் மீதான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது இலங்கை அரசியலுக்கு புதிதல்ல. அது மிகவும் பழைய கதைகளில் ஒன்று. சிங்கள அரசியல் சூழல்தமிழ் அரசியல் சூழல் ஆகிய இரண்டிலுமே றோ (R&AW )  என்னும் மூன்றெழுத்து மீதான கவர்ச்சி இப்போதும் முன்னரைப் போன்று பிரகாசமாகவே இருக்கிறது. ஆனால் தமிழ்ச் சூழலில் முன்வைக்கப்படும் அரைவேக்காட்டுத்தனமான வாதம் போன்ற ஒன்றல்ல இது. ஒரு நாட்டின் ஜனாதிபதி பிராந்திய சக்தியான இந்தியாவின் உளவுத்துறையின் மீது ஒரு சதிக் குற்றசாட்டை சுமத்துவதானதுஅரசியல் ரீதியில் பாரதூரமானது. இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் பனிப்போர் காலத்துக்குரியவை.
அப்போது தங்களுடன் முரண்பாடு கொண்டிருந்த நாடுகளின் தலைவர்களை அமெரிக்க உளவுத்துறை (சி.ஜ.ஏ) இலக்கு வைத்தமை  அனைவரும் அறிந்த சங்கதியே. சிலர் அவ்வாறு கொல்லப்பட்டுமிருக்கின்றனர். உதாணரமாக சிலியின் தலைவர் அலண்டே. இவ்வாறான சில கொலைகளை பிற்காலத்தில் சி.ஜ.ஏ ஏற்றுக்கொண்டுமிருக்கிறது. ஆனால் பனிப் போர் காலத்துக்கு பின்னர் அரசுகளின் உளவுத்துறைகள் ஜனநாயக நாடுகளின் தலைவர்களை இலக்குவைத்தமை தொடர்பில் இதுவரை எங்கும் பதிவாகவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில் நோக்கினால் மைத்திரிபால சிறிசேனதான் நீண்டகாலத்திற்கு பின்னர் இவ்வாறானதொரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். ஆதாரமற்ற இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் இரு நாட்டு உறவுகளில் பாரிய விரிசல்களாகவும் மாறலாம். 
நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இந்த நிலையில் இனியும் இந்த நாட்டில் ஒரு புதி அரசியல் யாப்பு வரும் என்று சம்பந்தன் கதை சொல்லிக் கொண்டிருக்கப் போகின்றாராஆகக் குறைந்தது தனது சொந்த மக்களுக்கு உண்மை சொல்லக் கூடிய ஒரு நபராகவாவது சம்பந்தன் இருக்க வேண்டும். சம்பந்தன் கடந்த மூன்று வருடங்களாக மைத்திரிபால சிறிசேனவை எந்தளவிற்கெல்லாம் புகழ்ந்து பேசலாமோ அந்தளவிற்கு புகழ்ந்து பேசியிருக்கிறார்.
2015 பொதுத் தேர்தல் பிரச்சாரங்களின் போது திருகோணமலையில் வைத்துமைத்திரிபால சிறசேன ஒரு நெல்சன் மண்டேலா போன்றவர் மார்ட்டின் லூதர் கிங் போன்றவர் என்றெல்லாம் புகழ்ந்து பேசியிருந்தார். சம்பந்தனின் இந்த நகைப்புக்கிடமான பேச்சைஒரு வேளைஜனாதிபதி மைத்திரிபாலவின் பிள்ளைகள் கேட்க நேர்ந்திருந்தால் கூட சங்கடப்பட்டிருப்பார்கள். இப்போது அந்த நெலசன் மண்டேலா மார்ட்டின் லூதர் கிங் மைத்திரிபால சிறிசேனவோதன்னை கொலைசெய்ய றோ சதி செய்வதாக கூறுகின்றார். இதுவரை தன்னை ஒரு சாதுவாக காண்பித்துவந்த ஜனாதிபதி மைத்திரிபாலவோ திடிரென்று சிங்கமாக காட்சியளிக்கின்றார். பிராந்திய சக்தியான இந்தியாவை வெளிப்படையாகவே பகைக்கும் நிலைக்கு சென்றிருக்கிறார். இப்போது சம்பந்தனின் நிலைப்பாடு என்ன?
ஆனால் ஒன்று இலங்கை அரசியல் அரங்கு பலம்வாய்ந்த உளவுத்துறைகளின் உதைபந்தாட்ட திடலாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்த சூழலை கையாளும் ஆற்றல் நிச்சயமாக சம்பந்தனிடம் இல்லை. அது சம்பந்தனுக்கும் தெரியாதல்ல.

ad

ad