புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 அக்., 2018

நாடு கடந்த தமிழ் அமைப்புகளின் தேவைக்கிணங்கவே அரசாங்கம் செயற்படுகின்றது

நாடு கடந்த தமிழ் அமைப்புகளின் தேவைக்கிணங்கவே அரசாங்கம் புதிய அரசியலமைப்பு திருத்தத்தை
மேற்கொள்கின்றது என கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாடு கடந்த தமிழ் அமைப்புகளின் தேவைக்கிணங்கவே அரசாங்கம் புதிய அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்கின்றது.
அத்துடன் அரசாங்கத்தின் இயலாமையே பொருளாதார பிரச்சினைக்கு காரணமாகும். அதனால் இந்த அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் மக்கள் வாழமுடியாத நிலை ஏற்படும்.
மேலும் இந்த அரசாங்கம் தொடர்ந்து அதிகாரத்தில் இருந்தால் மக்கள் வாழமுடியாத நிலைமையே ஏற்படும். அத்துடன் நாட்டின் முக்கிய வளங்களும் வெளிநாடுகளுக்கு விற்கப்படும்.
அதனால் அரசாங்கத்தை வீழ்த்தியே ஆகவேண்டும். அதற்காக நாட்டை நேசிக்கும் மக்கள் எங்களுடன் கைகோர்த்துக்கொள்ள வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.

ad

ad