புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 நவ., 2018

தாயகத்தின் விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர் கெப்படிபொல உள்ளிட்ட 10,000 வீரர்களுக்காக புண்ணிய நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்

ஊவா வெல்லச சுதந்திரப் போராட்ட 200 வருட பூர்த்தியை முன்னிட்டு தாயகத்தின் விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த
மாவீரர் கெப்படிபொல உள்ளிட்ட 10,000 வீரர்களுக்காக சாந்தி மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புண்ணிய நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (25) பிற்பகல் கொழும்பு 07, சேருவில பௌத்த நிலையத்தில் இடம்பெற்றது.
மாவீரன் கெப்படிபொலவின் ஓவியத்திற்கு மலரஞ்சலி செலுத்திய ஜனாதிபதி , கௌரவ மகா சங்கத்தினருக்கு காலை உணவு வழங்கு நிகழ்விலும் கலந்துகொண்டார்.
சுதந்திர போராட்டத்தின்போது உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சமய ஆராதனை இலங்கை அமரபுர நிக்காயவின் மகாநாயக்கர் சங்கைக்குரிய.கொடுகொட தம்மாவாச தேரரினால் நிகழ்த்தப்பட்டதுடன், கெப்படிபொல நினைவு உரையை சேருவில பௌத்த நிலையத்தின் சங்கைக்குரிய.கொடபொல அமரகித்தி தேரர் மேற்கொண்டார்.
மகா சங்கத்தினர், புத்தசாசன அமைச்சர் உதய கம்மன்பில உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ad

ad