www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வியாழன், நவம்பர் 01, 2018

பாராளுமன்றில் பிரதமர் கதிரையில் அமரப்போவது யார்? அறிவித்தது சபாநாயகர் அலுவலகம்

எதிர்வரும் 5ஆம் திகதி கூடவுள்ள பாராளுமன்ற அமர்வின் போது, சபையில் பிரதமருக்காக ஒதுக்கப்பட்டுள்ள
ஆசனத்தை மஹிந்த ராஜபக்ஸவுக்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வர்தமானியில் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளதால் அவருக்கே இந்த ஆசனத்தை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விடயத்தில் சபாநாயகர் தலையீடு செய்யப்போவதில்லை எனவும் இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற அதிகாரிகளால் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சபாநாயகரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது