புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 நவ., 2018

இலங்கையின் வடக்கை தாக்கலாமென எதிர்பார்க்கப்படும் கஜா புயலின் வேகம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் கஜா புயல் தற்போது சென்னைக்கு கிழக்கே 490 கி.மீ.தூரத்திலும் நாகப்பட்டினத்துக்கு வடகிழக்கே சுமார் 580 கி.மீ. தூரத்திலும் நிலை கொண்டுள்ளது.

நாளை மாலை 4.30க்கும் இரவு 9.00 மணிக்கும் இடையில் கடலூர் மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும். கஜா புயல் கரையைக் கடக்கும் போது இலங்கையின் வடக்கு மாகாணத்தின் தெல்லிப்பளை, பருத்தித்துறை, மருதங்கேணி கண்டாவளை, கரைதுறைப்பற்று வேலணை, சங்கானை ஊர்காவற்றுறை மற்றும் காரைநகர் பிரதேச செயலர் பிரிவுகளுக்குட்பட்ட கரையோரப் பகுதிகளில் தாக்கத்தை விளைவிக்குமென யாழ்.பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளர் நா. பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.

காற்றின் வேகம் மணிக்கு 50 கி.மீ. முதல் 80 கி.மீ வேகத்தில் இருக்கக்கூடும். உட்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40 கி.மீ முதல் 60 கி.மீ. வரை வீசக்கூடும். சில நேரங்களில் காற்று 90 கி.மீ. வேகத்தில் கூட வீச வாய்ப்புண்டு. 

நாளை காலை முதல் மழைபுயல் பொழிவு இருக்கும். ஆரம்பத்தில் தூறலுடன் இருந்தாலும் பிற்பகலில் கன மழைக்கு வாய்ப்புண்டு. 16 மற்றும் 17-ம் தேதிகளிலும் இடையிடையே மழை தொடரும்.

சில சமயங்களில் கரையைக் கடக்கும் போது கஜா வலுவிழந்த புயலாக மாறினால் கனமழை கிடைக்கும் .அத்துடன் காற்றின் வேகம் குறைவாக இருக்குமெனவும் யாழ்.பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளர் நா. பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

ad

ad