www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

ஞாயிறு, நவம்பர் 04, 2018

ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர்கள் நால்வருக்கு அமைச்சு பதவிகள்

ஒன்றிணைந்த எதிரணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் புதிய அமைச்சரவையில் அமைச்சுப்
பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, தினேஸ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில ஆகிய நால்வருக்கே அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளனவென தெரிவிக்கப்படுகின்றது.
புதிய அமைச்சரவை நியமனங்களில் இதுவரை ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர்கள் எவருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படாத நிலையில், அரசமைப்புக்கு அமைய, மேலும் 15 அமைச்சர்களும், 24 இராஜாங்க, பிரதி அமைச்சர்களை நியமிப்பதற்கான வெற்றிடங்கள் நிலவுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.