புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 நவ., 2018

மைத்திரியுடன் இரவிரவாக பேச்சு?


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்சித் தலைவர்கள், சபாநாயகக்கு இடையில், விசேட கலந்துரையாடல் ஒன்று, ஜனாதிபதி செயலகத்தில், தற்போது இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கலந்துரையாடலில் ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே

ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத்தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுப்பதாக, முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் மஹிந்தவுக்கும் நாம் சவால் விடுக்கின்றோம் அதிக நாள்கள் செல்ல முன்னர் 70 இலட்சத்துக்கு அதிகமான மக்கள் அவரை துரத்த தயாராகவிருக்கின்றனர் என்றார்.
நாம் 10 தேர்தல்களுக்கு தயாராகவிருக்கின்றோம். ஜனநாயக ரீதியான தேர்தலுக்கு நாம் தயார் எமக்கு ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒன்றாகத் தாருங்கள் என்றார்.
இதேவேளை, முடிந்தால் ஜனாதிபதித் ​தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சவால் விடுப்பதாக முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கவும் தயாராகவிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்​கொண்டு தெரிவித்துள்ளார்.

ad

ad