www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

ஞாயிறு, நவம்பர் 04, 2018

அமைச்சு பதவியை பெற்ற ஐ.தே.க. அமைச்சர், லண்டனுக்கு அவசர விஜயம்!

பிரதமர் மஹிந்த – ஜனாதிபதி மைத்திரி அரசாங்கத்தில் கடந்த புதன்கிழமை அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட வசந்த சேனநாயக்க அவசரமாக லண்டனுக்கு சென்றுள்ளார்.

அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சென்றுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. மேலும் குறித்த விஜயம் தனிப்பட்ட காரணங்களுக்கானது என மேற்கோள்காட்டி அந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினரான ரொஷான் ரணசிங்க மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் லசந்த அழகியவண்ண ஆகியோரும் வெளிநாட்டுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் வசந்த சேனநாயக்கவும் அவசரமாக லண்டனுக்கு சென்றுள்ளார்.
அத்துடன் நேற்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது