புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2018

உலக நாடுகளின் தூதுவர்கள சந்திப்பில் கூட்டமைப்பு

அரசியல் கைதிகள் விவகாரம்,காணாமல் போனோர் விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களிலோ தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு தொடர்பிலோ புறப்பட்டிருக்காத கூட்டமைப்பு ரணிலின் கதிரையினை காப்பாற்ற தூதரகங்கள் தோறும் படியேறத்தொடங்கியுள்ளது.

அண்மையில் கூட்டமைப்பிற்கும் ரணிலுக்குமிடையே நடைபெற்ற சந்திப்பில் ரணிலால் முன்வைக்கப்பட்ட ஆலோசனையினையடுத்து இலங்கையில் உள்ள உலக நாடுகளின் தூதுவர்களை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து பேச்சு நடத்துகின்றனர்.
நாட்டில் தறற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து உலக நாடுகளின் தூதுவர்களுக்குச் சம்பந்தன் இந்தச் சந்திப்பில் விளக்கியுள்ளதாக ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியில் இருந்து விலக்கிய ஜனாதிபதி, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஸவை நியமித்துள்ளமையால் நாட்டில் அரசியல் நெருக்கடி நிலை தீவிரமடைந்துள்ளது.
இந்த நெருக்கடி நிலை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளதால் நாடாளுமன்ற செயற்பாடுகளும் பாதிப்படைந்துள்ளன. கடந்த இரு தினங்கள் நாடாளுமன்றத்தில் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் எம்.பிக்கள் சிலர் காயமடைந்தனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட இந்தச் சட்டவிரோத பிரதமர் நியமனத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கடுமையாக எதிர்த்து வருகின்றது.

ஜனநாயகத்தை மீறும் வகையில் ஜனாதிபதி மேற்கொண்ட இந்தச் செயற்பாட்டுக்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வருகின்றது.

தனது செயற்பாட்டுக்குக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற ஜனாதிபதி முயன்றபோது அதனைக் கூட்டமைப்பு அடியோடு நிராகரித்துவிட்டது.

இந்நிலையில், தற்போது எழுந்துள்ள அரசியல் நெருக்கடி நிலை குறித்து விளக்குவதற்கும், ஜனாதிபதியின் சட்டவிரோத செயற்பாடு தொடர்பில் எடுத்துரைப்பதற்கும்  உலக நாடுகளின் தூதுவர்களுக்கு சந்திப்பில் இரா. சம்பந்தன் விளக்கியதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் பிரிட்டன், பிரான்ஸ், சுவிஸ், ஜேர்மனி, நோர்வே, கனடா, இத்தாலி, தென்னாபிரிக்கா, பங்களாதேஷ், தென்கொரியா, அமெரிக்கா, பெல்ஜியம், இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா. ஆகியவற்றின் தூதுவர்களும் பங்கேற்றதாக தெரியவருகின்றது.

ad

ad