www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வெள்ளி, நவம்பர் 02, 2018

கிழக்கு எதிர்நோக்கும் ”வியாழேந்திரன் சிக்கல்” - வ.ஐ.ச.ஜெயபாலன்.


நண்பர் வியாழேந்திரன் மகிந்த அரசில் இணைந்தமை எதிர்பார்க்காத அதிற்ச்சிச் சேதியாகும். நான் எதிர்ப்பவர்
அணி வண்டியில் தொற்றிக்கொள்ளமுன்னம் கொஞ்சம் சிந்திக்க முனைகிறேன்.
அதே சமயம் சோமாலியாவை விட வறுமையில் உழலும் படுவான்கரையை தண்ணீர் மணல் மாபியாக்களிடம் இருந்து பாதுகாக்கும் முயற்ச்சியில் அவர் தன் பாதுகாப்பைப் பணயம் வைத்துப் போராடியவர் என்பதையும் நினைத்துப் பார்க்கிறேன். இந்த “வியாழேந்திரன் சிக்கல்” கிழக்கில் பல தமிழ்த் தலைவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைதான். இதனை சம்பந்தர் நன்கு அறிவார். 
.
வியாழேந்திரன் என்னிடம் பேசும்போது தான் கூட்டமைப்பின் கொள்கைகளைத் தொடர்ந்தும் ஆதரிப்பதாகவும் படுவான் கரையை பாதுகாக்கும் வெறியில் வேறு வழிதெரியாது அரசில் இணையும் முடிவை எடுத்ததாகவும் தெரிவித்திருக்கிறார். 
.
தமிழர் உரிமை தொடர்பான பிரச்சினையில் தொடர்ந்தும் வியாழேந்திரன் கூட்டமைப்பை ஆதரிக்கவேண்டும். இதனை வியாழேந்திரன் தெளிவுபடுத்த வேண்டும். கூட்டமைப்பு வியாழேந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை பின்போட்டுவிட்டு அவருடனும் கிழக்கு தலைவர்களோடும் ’வியாழேந்திரன் சிக்கல் தொடர்பாக’ பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். 
.
கூட்டமைப்பு கிழக்கின் நெருக்கடிகளையும் கிழக்கு தலைவர்கள் எதிர்நோக்கும் விசேட கழ நிலமைகளையும் புரிந்துகொள்வது தொடர்பாக அதிக அக்கறை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். 
கிழக்கின் பிரச்சினைகளை வடபுல தமிழர்கள் புரிந்துகொள்ளுவதில்லை. கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட்டமைப்பு கட்ச்சி முடிவின்படி திரும்பப்பெறக்கூடிய விசேட சலுகை வளங்க வேண்டும். உரிமைப் பிரச்சினையில் கூட்டமைபில் தீவிரமாக இயங்கிக்கொண்டே அரசுடன் செயல்பட அவர்கள் நிர்பந்திக்கப் படுகிறார்கள். இதுபற்றி கூட்டமைப்பு சிந்திக்கவேண்டும்.
.
இதுபற்றி என் சிந்தனையை மேலும் தெளிவுபடுத்த ஒரு தீர்மானத்துக்கு வர ”வியாழேந்திரன் சிக்கல் “ பற்றிய தமிழர் கூட்டமைபின் சிந்தனைகளையும் கருத்துக்களை எதிர்நோக்கி இருக்கிறேன். கூட்டமைப்போடு பேசுங்கள் என வலியுறுத்தும் அதே சமயம் நான் வியாழேந்திரனிடம் கேட்டுக்கொள விரும்புவது என்னவெனில்.
“ உங்கள் நிலைபாடு முஸ்லிம்களுக்கு கிழக்கில் தமிழர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நட்போடு புரிய வைப்பதாகவும் முஸ்லிம்களின் நியாயமான கவலைகளை தமிழருக்கு எடுத்துச் சொல்வதாகவும் மேம்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். இதையே எப்போதும் கிழக்கின் சகல தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்களுக்கு வற்புறுத்திக் கூறி வந்திருக்கிறேன். மீண்டும் அதனை உரத்த தொனியில் கூற விரும்பிகிறேன். 
.
வியாழேந்திரன் தமிழர்களது நிலம் நீர் அபிவிருத்தி பாதுகாப்பு தொடர்பான பணிகளை ஆற்றும்போது தான் கிழக்கு தமிழரதும் முஸ்லிம்களதும் தலைமைப் பணியில் இருபவர் என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது” என்பதையும் வலியுறுத்துகிறேன். இதனையே கிழக்கு மாகான முஸ்லிம் தலைவர்களுக்கும் அமைச்சர்களுக்கும் கூற விரும்புகிறேன். கிழக்கு முஸ்லிம் தலைவர்கள் அமைச்சர்கள் முஸ்லிம் மக்களின் நலன்களை பாதுகாத்து அபிவிருத்தி செய்யும் அதே தருணம் தாம் கிழக்கு முஸ்லிம்களதும் தமிழரதும் தலைமைப் பணியில் இருக்கிறவர்கள் என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. இது கிழக்கில் தமிழரும் முஸ்லிம்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பேசி தீர்த்தல் மட்டுமே சாத்தியமான ஒரே வழி என்பதை வலியுறுத்துவதாகும்.
.
வியாழேந்திரன் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனை சந்தித்து பேசவேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்