புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 டிச., 2018

வெளியேற வேண்டும்: வெளியேற மாட்டோம்!

நாங்கள் எப்போதும் உண்மையையே கூறுவோம். அந்த உண்மைகள் கடுமையானதாக இருக்கின்ற போது கடுமையான முடிவுகளை எடுப்போம். அதற்கமையவே தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் மற்றும் ஈ.பீ.ஆர்.எல்.எப். ஆகிய அமைப்புகளை தமிழ் மக்கள் பேரவையில் இருந்து வெளியேற்றுமாறு கோரியிருக்கின்றோம். இதற்கான பதில் அடுத்த கூட்டத்தில் வெளியிடப்படும் வரை காத்திருக்கின்றோம்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடைபெற்ற போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புதியஅரசமைப்பு இடைக்கால அறிக்கைக்கான ஆணையைக் கேட்டுத் தான் போட்டியிட்டிருந்தனர். அதுதான் அவர்களின் பிரதான கோரிக்கையாக அந்தத் தேர்தலில் முன்வைக்கப்பட்டிருந்தது.

அதில்; தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் கூட்டமைப்போடு சேர்ந்துதான் போட்டியிட்டது. அதேநேரம், தமிழ் மக்கள் பேரவை ஒரு தீர்வுத் திட்டம் தயாரித்திருக்கிறது. அதனை முற்றிலும் நிராகரித்து அதற்கு நேர்மாறாக இருக்கக் கூடிய ஒற்றையாட்சி அரசமைப்பை உருவாக்குவதற்கு செயற்பட்டது மட்டுமல்ல, அதற்கு ஆணையைக் கேட்டும் தேர்தலில் போட்டியிட்டது.

இது அடிப்படையில் தமிழ் மக்கள் பேரவையின் கொள்கையை மீறுகின்ற விடயமாக அமைந்திருப்பதால் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தை பேரவையில் இருந்து வெளியேற்ற வேண்டுமென் நாங்கள் கோரியுள்ளோம்” என தெரிவித்தார்.

இதனிடையே தமிழ் மக்கள் பேரவையில் தொடர்ந்தும் நாங்கள் அங்கம் வகிக்கின்றோம் என தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

“தமிழ் மக்கள் பேரவையிலிருந்து எங்களை யாரும் விலக்கவும் இல்லை. நாங்கள் விலகவும் இல்லை. அவ்வாறான நிலையில் எங்களை விலக்க வேண்டுமென்று யாரும் கோரவும் முடியாது. அவ்வாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரினால் அவரை விலக்க வேண்டுமென நாங்களும் கோருவோம்

ad

ad