www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

ஞாயிறு, நவம்பர் 04, 2018

ஜனாதிபதி - பிரதமர் தலைமையிலான மக்கள் பேரணி நாளை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தோற்றுவித்துள்ள அரசாங்கத்துக்கு
ஆதரவு வழங்கும் முகமாகவும், அரசாங்கத்தின் ஒற்றுமையினை உறுதிப்படுத்தும் விதமாகவும் மக்கள் பேரணியொன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இடம்பெறும் இப் பேரணியானது பாராளுமன்ற வளாகத்தில் நாளை நண்பகல் ஆரம்பமாகவுள்ளது.
அத்துடன் குறித்த மக்கள் பேரணியானது எவ்விதத்திலும், எவருக்கும் பாதிப்பினை ஏற்படுத்தாது எனவும், ஆட்சி மாற்றத்தின் மகிழ்வினை மாத்திரம் வெளிப்படுத்த அனைவரும் ஒன்று கூடுகின்றனர் எனவும் பொதுஜன பெரமுனவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.