புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 நவ., 2018

கருணாவே கொன்றார்: சுமந்திரன் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் இருந்த பொலிசார் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டமையின் பின்னணியில் கருணா இருப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனும் ஜக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான நளின் பண்டாரவும் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இந்த பொலிசார் இருவர் மீதே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று(29) வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்துள்ளதுடன் வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸார் இருவரே அவ்வாறு உயிரிழந்துளளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது பொலிசார் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டமையின் பின்னணியில் கருணா இருப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனும் ஜக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான நளின் பண்டாரவும் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

ad

ad