புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 நவ., 2018

கோத்தபாயவின் நிகழ்ச்சி நிரலிலேயே புலம்பெயர் கட்டமைப்புக்கள் உடைக்கப்பட்டன!

கோத்தபாய ராஜபக்சவின் நிகழ்ச்சி நிரலிலேயே புலம்பெயர் தமிழ்த் தேசியக் கட்டமைப்பு
க்களை உடைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தலைமைச் செயலகம் என்ற பெயரில் இயங்கும் கே.பி கும்பலில் இருந்து பிரிந்து வந்து தற்பொழுது தனிக்குழுவாக இயங்கும் ஒருவர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

யாழ் பல்கலைக் கழத்தின் முன்னாள் விரிவுரையாளரான மு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய நூல் ஒன்றை இலண்டனில் வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மயூரன் என்ற நபரே இவ் ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கியிருப்பதாகத் தெரிய வருகின்றது.
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மூத்த செயற்பாட்டாளர் ஒருவருடன் நேற்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடிய குறித்த நபர், மு.திருநாவுக்கரசு அவர்களின் நூலை வெளியிட்டு வைப்பதற்கு உதவுமாறு கோரியதாகவும், எனினும் அதற்குப் பதிலளித்த குறித்த செயற்பாட்டாளர்: ‘நீங்கள் தானே தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவை இயக்கம் கலைத்து விட்டதாகக் கூறினீர்கள்! இப்பொழுது எதற்காக எமது உதவியைக் கோருகின்றீர்கள்?’ என்று வினவியதாகவும் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் நிதிப் பிரிவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் சங்கதி-24 இணையத்திற்குத் தெரிவித்தன.
Mayooran
கே.பி குழுவில் இருந்து பிரிந்து வந்த மயூரன்

அதற்குப் பதிலளித்த மயூரன் என்பவர், ‘தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவை கலைக்குமாறு எங்களின் பொறுப்பாளர் விநாயகம் அண்ணை தான் கட்டளையிட்டார். அதைத் தான் நாங்கள் செய்தோம். இப்போது விநாயகம் அண்ணை செயற்பாட்டில் இல்லை. நாங்களும் தலைமைச் செயலகத்தை விட்டு வெளியில் வந்து விட்டோம்’ என்று தெரிவித்ததாக பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் நிதிப் பிரிவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் சங்கதி-24 இணையத்திற்கு மேலும் குறிப்பிட்டன.
Mayooran
மயூரனின் முகநூல் பதிவில் இருந்து

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் வெளிக்களப் பணிப் பிரிவுக்குப் பொறுப்பாக விளங்கிய விநாயகம் அல்லது அறிவழகன் என்றழைக்கப்படும் சேகரப்பிள்ளை விநாயகமூர்த்தி அவர்களின் துணைவியாரும், பிள்ளைகளும் இறுதி யுத்தத்தில் சிறீலங்கா படைகளிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து வவுனியா தடுப்பு முகாம் ஒன்றில் வைத்து அவர்களைக் கைது செய்து திருகோணமலைக்கு கொண்டு சென்ற சிறீலங்கா புலனாய்வுத்துறையினர், அவர்களைப் பணயக் கைதிகளாகப் பயன்படுத்திப் புலம்பெயர் கட்டமைப்புக்களை உடைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தார்கள் என்று ஏலவே தகவல்கள் வெளிவந்திருந்தன.

இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் 2015ஆம் ஆண்டின் இறுதியில் விநாயகம் அவர்களின் துணைவியாரும், பிள்ளைகளும் சிறீலங்கா புலனாய்வுத்துறையினரால் விடுதலை செய்யப்பட்டு, அவர்களின் வீடு அமைந்துள்ள யாழ் வரணி இடைக்குறிச்சி பகுதியில் இறக்கி விடப்பட்டனர்.

இது பற்றி இவர்களிடம் விசாரணை செய்வதற்கு உள்@ர் சிறீலங்கா காவல்துறையினர் சென்ற பொழுது, சிறீலங்கா புலனாய்வுத்துறையினரால் வழங்கப்பட்ட கடிதம் ஒன்றை இவர்கள் காண்பித்ததோடு, தம்மைப் பற்றிய முழு விபரங்களையும் சிறீலங்கா புலனாய்வுத்துறையினருடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.

இவை அனைத்தும் 2015ஆம் ஆண்டின் இறுதியில் ஊடகங்களில் செய்திகளாக வெளிவந்திருந்தன.

ad

ad