www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வியாழன், நவம்பர் 01, 2018

இலங்கை தொடர்பில் அவசரம் வேண்டாம்; வெளிநாட்டுத் தூதுவர்களிடம் சபாநாயகர் வேண்டுகோள்!

இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டினை அவசரப்பட்டு எடுக்க வேண்டாம் என்று வெளிநாட்டு தூதுவர்களிடம் சபாநாயகர்
கரு ஜயசூரிய கோரியுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு நியாயமான முறையில் தீர்வுகாண முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதுவரை இலங்கை தொடர்பிலான நிலைப்பாடுகளை எடுப்பதற்கு காலம் தாழ்த்துமாறும் அவர் கேட்டுள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரியாவுக்கும் இலங்கையிலுள்ள வெளிநாட்டு உயர் அதிகாரிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதன்போதே, சபாநாயகர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி ஹனா சிங்கெர் (Hanaa Singer), ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மார்கியூ (Margue), பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டேயுரிஸ் (James Dauris), கனேடிய தூதுவர் டேவிட் மெக்கின்னன் ( David Mackinnon ) ஜேர்மன் தூதர் ஜோர்ன் ரோட் (Jorn Rohde) ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.