புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 நவ., 2018

வெற்றிலையா தாமரை மொட்டா - மகிந்த மைத்திரி அணி மோதல்

2019 ஆம் ஆண்டு ஜனவரி 05 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எந்த சின்னத்தின்கீழ்
போட்டியிடுவது என்பது குறித்து மைத்திரி, மஹிந்த கூட்டணிக்குள் கருத்து மோதல் உருவாகியுள்ளது.

கடந்தமுறைபோல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலை சின்னத்தின்கீழ் போட்டியிடவேண்டும் என மைத்திரி அணியினரும், அவ்வாறு முடியாது, பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டு சின்னத்தின்கீழேயே போட்டியிடவேண்டும் என்று மஹிந்த அணியினரும் கருத்து வெளியிட்டுவருகின்றனர்.

எனினும், இதுவிடயத்தில் அனைத்து தரப்பின் இணக்கப்பாட்டுடன் முடிவொன்று எடுக்கப்படவேண்டும் என்று கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணையவுள்ளதாக நாமல் ராஜபக்ச அறிவித்துள்ளார். அந்தமுன்னணியின்கீழ் போட்டியிடவேண்டும் என்பதே நாமலின் நிலைப்பாடாக இருக்கின்றது.

ad

ad