புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2018

பப்புவா நியூகினியாவில் பாராளுமன்றத்தினுள் படைகள் புகுந்து தாக்குதல்

பப்புவா நியூகினியா நாட்டில் பாராளுமன்ற கட்டிடத்துக்குள் ஆயுதப்படையினர், காவல்துறையினர் மற்றும் சிறை அதிகாரிகள்
உட்புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். வறுமையில் வாடும் பப்புவா நியூகினியாவின் தலைநகரான போர்ட் மோரஸ்பியில், அண்மையில் அபெக் எனப்படும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜின்பிங், அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் உள்ளிட்ட 21 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர்; மற்றும் பாதுகாப்பு படையினருக்கு துணையாக அவுஸ்திரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து பாதுகாப்பு படையினர் வந்திருந்தனர்.இந்த நிலையில், உள்நாட்டு படையினருக்கும், காவல்துறையினருக்கும் உரிய சம்பளத்தினை அந்த நாட்டு அரசு வழங்க வில்லை எனவும் இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், ; பாராளுமன்ற கட்டிடத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை நூற்றுக்கணக்கானோர் இணைந்து நடத்தியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

ad

ad