புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 நவ., 2018

மீண்டும் நல்லாட்சிக்கு திரும்புவோம்- மைத்திரியிடம் வேண்டுகோள் விடுத்த சு.க.பாராளுமன்ற உறுப்பினர்கள்

மீண்டும் நல்லாட்சிக்கு திரும்புவோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாட்டில் தற்போது உருவாகியுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக ஜனாதிபதி தலையிடவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
ஓக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்னர் காணப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தை அமைப்பதே தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான ஒரே வழி என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்கவிற்கு பதில் இன்னொருவரை நியமிப்பது தொடர்பில் ஐக்கியதேசிய கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வது தொடர்பிலும் இந்த கூட்டத்தில் ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி இதற்கு சம்மதித்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படுவதில் உள்ள நெருக்கடி குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளனர்.
மீண்டும் நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்த முடியாவிட்டால் பாராளுமன்றத்தில் தனித்து செயற்படவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ad

ad