புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 நவ., 2018

இலங்கையின் சிவசேனா கட்சியின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் இந்து சமய கொள்கைகள் தொடர்பில் கடும் போக்கை கடைப்பிடித்து வரும் ஒருவர்.
இலங்கையின் வடக்கே இந்து சமய விழுமியங்களை
பாதுகாக்கும் நோக்கோடு இவரின் சிவசேனா அமைப்பு இயங்கி வருகின்றது.
இந்நிலையில் நேற்று பலாலி இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற தீபாவளி நிகழ்வில் மறவன்புலவு சச்சிதானந்தன் வேட்டி அணியாமல் வெறும் காற்சட்டை சகிதம் பங்கு பற்றியிருந்த விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல இன மதங்களை சேர்ந்த முக்கியஸ்தர்கள் பங்கு பற்றிய நிகழ்வில் இவ்வாறு கீழ்த்தரமாக காற்சட்டை அணிந்து சென்ற மறவன்புலவு சச்சிதானந்தன் இந்து சமய விழுமியங்கள் பற்றி பேசுவதற்கு அருகதை உடையவரா என்னும் கேள்வி எழுந்துள்ளது.
இவர் அண்மையில் , தமிழ் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் ஜனாதிபதி மைத்திரியை ஒருமையில் திட்டியமை தமிழ் பண்பாடுகளை சிதைப்பதாக காரணம் கூறி சுமந்திரனை தமிழரசு கட்சியில் இருந்து நீக்கவேண்டும் என கோரியிருந்தமை குறிப்பிடதக்கது.

ad

ad