புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 நவ., 2018

ஜனாதிபதிக்கும் சம்பந்தனிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு?


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று(திங்கட்கிழமை) மாலை ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது ஜனாதிபதினால் வழங்கப்பட்டுள்ள புதிய பிரதமர் நியமனம் மற்றும் நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், நாடாளுமன்ற அமர்வுகளை உடனடியாக கூட்டுமாறு இரா.சம்பந்தன் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ சுமந்திரனும் கலந்து கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் இன்று மாலை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரை சந்தித்து நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் பேசியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

ad

ad