www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வியாழன், நவம்பர் 01, 2018

வடகிழக்கு பருவ மழை தொடங்கியது - காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்பு

இலங்கைக்கு கிழக்கே தற்போது நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தம், வடமேற்கு திசையில் தமிழகத்தை
நோக்கி நகரும்போது மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது.தென்மேற்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21-ந்தேதி முடிவுக்கு வந்தது.
அதன் பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் முதல் தெற்கு ஆந்திராவின் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதி வரை காற்றழுத்தம் நிலவுகிறது.
இதே போல் இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் 3 நாட்களாக மழை நீடிக்கிறது.
இதையடுத்து வடகிழக்கு பருவ மழை இன்று தொடங்குவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் தொடங்கி படிப்படியாக வலுப்பெற்று உள் மாவட்டங்களில் பருவ மழை பெய்யும். தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களுக்கும் பரவும் என்றும் வானிலை மையம் தெரிவித்தது.
சென்னையில் விட்டுவிட்டு பலத்த மழை பெய்வதால் கடந்த 3 நாட்களாக பருவ நிலை மாறி இதமான குளிர் நிலவுகிறது. நள்ளிரவில் பலத்த மழை பெய்தது. இன்று காலையிலும் மழை விட்டுவிட்டு தூறிக் கொண்டே இருந்தது.
இதற்கிடையே இலங்கை அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது தீவிரம் அடைந்து புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாகவும் தீபாவளியன்று பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் கருத்து வெளியிட்டுள்ளார்.
தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவ மழையால் அடுத்த 2 நாட்களுக்கு 3-ந்தேதி வரை சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யும். உள் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும்.
இலங்கைக்கு கிழக்கே தற்போது குறைந்த காற்றழுத்தம் நிலை கொண்டுள்ளது. அது வடமேற்கு திசையில் தமிழகத்தை நோக்கி நகரும்போது மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது. வரும் 6-ந்தேதி தீபாவளி பண்டிகையன்று புயல் காற்றுடன் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை தமிழகத்தில் பரவலாக மழை நீடிக்கும்.