புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 நவ., 2018

சம்பந்தன் முன்வைத்த கோரிக்கையை மறுத்த மகிந்த


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்வைத்த முக்கிய கோரிக்கையை
பிரதமர் மகிந்த ராஜபக்ச மறுத்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் கடந்த 30ம் திகதி பேச்சு வார்த்தை ஒன்று இடம்பெற்றிருந்தது.
இதன்போது சம்பந்தன் முன்வைத்து கோரிக்கையினை மகிந்த ராஜபக்ச மறுத்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாக உள்ள- அதிகாரங்களை மத்திய அரசும், மாகாண அரசும் பகிர்ந்து கொள்ளும் வகையிலான, இணைந்த பொதுப் பட்டியலை (Concurrent List) நீக்க வேண்டும் என்று இரா.சம்பந்தன் கோரியிருந்தார்.
எனினும், மகிந்த ராஜபக்ச, உங்களின் கோரிக்கைக்கு இணங்கி விட்டு நான் எப்படி கார்ல்டன் இல்லத்துக்குத் திரும்ப முடியும்? என்று, கேள்வி எழுப்பியுள்ளார்.
என்னால், அரசியல் கைதிகளின் விடுதலையுடன் தொடர்புடைய, மாகாணசபைகளுக்கான பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் குறித்து விரிவான கலந்துரையாடலை நடத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சம்பந்தனின் கோரிக்கை சமஷ்டியை கோருகிறது, அதனை வழங்க முடியாது என்றும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளதாக” அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ad

ad