புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 நவ., 2018

மீண்டும் ரணில் பக்கம் பாய்ந்த சுரேஸ்

ஒரு மாத காலத்தினுள் மூன்றாவது தடவையாக கட்சி மாறி முன்னாள் அமைச்சர் வடிவேல் சுரேஷ் சாதனை படைத்துள்ளார்.அவர் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இன்று இணைந்து கொண்டுள்ளார்.

முன்னதாக ரணிலிடமிருந்து மஹிந்தவின் கட்சிக்கு தாவிய அவர் பின்னர் அவ்வாறு தாவவில்லையென தெரிவி;த்திருந்தார்.

ஆனால் மறுநாளோ மஹிந்த அமைச்சரவையில் அமைச்சராக பொறுப்பேற்று ரணிலுக்கே தண்ணி காட்டியிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் இன்று ரணில் பக்கம் திரும்பி தனது சாதனையினை உறுதிப்படுத்தியுள்ளார்

ad

ad