புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 டிச., 2018

லைகாவின் ஞானம் அறக்கட்டளை நிவாரணப் பணி: ஊர்காவற்றுறைக்கு பொருட்கள் பகிர்ந்தளிப்பு

லைகாவின் ஞானம் அறக்கட்டளையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணிகள் தற்போது யாழ். குடா நாட்டின் ஊர்காவற்றுறை பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 34 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
யாழ். குடா நாட்டில் சாவகச்சேரி பகுதிக்கு நேற்றைய தினமும், வேலணை பகுதி மக்களுக்கு இன்று காலையும் நிவாரணப் பணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன.
தொடர்ந்து நல்லூர், சண்டிலிப்பாய், சங்கானை, உடுவில், தெல்லிப்பளை ஆகிய பகுதிகளுக்கு நிவாரணப்  பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
நாடளாவிய ரீதியில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4 கோடி ரூபாய் பெறுமதியிலான உலர் உணவுப் பொருட்கள், போர்வைகள், நுளம்பு வலைகள், தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்கள் லைகாவின் ஞானம் அறக்கட்டளையினால் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad