புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 நவ., 2018

பிரபாகரன் வழங்கிய முக்கிய ஆவணங்களுடன் மகனின் புகைப்படத்தைக் காண வந்த தாய்

தமிழீழ விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்ட முக்கிய ஆவணங்களுடன் தனது மகனது புகைப்படத்தினைத் தாயொருவர் தேடியலைந்த சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வீரச்சாவடைந்த மாவீரர்களின் உருவப் படங்களை அவர்களது பெற்றோருக்கு வழங்கி கௌரவிக்கும் நிகழ்வொன்று நேற்று  ஜனநாயகப் போராளிகள் கட்சியினால் மட்டக்களப்பு வெல்லாவெளியில் நடத்தப்பட்டது.
இதனையறிந்த மாவீரரின் தாயொருவர் வீரச்சாவடைந்த தனது மகனது பிரபாகரன் வழங்கிய முக்கிய ஆவணங்களுடன் மகனின் புகைப்படத்தைக் காண குறித்த நிகழ்விற்கு ஓடிவந்தார் அந்த வயது முதிர்ந்த தாய்.
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவும், தனது மகனின் புகைப்படம் கிடைக்கும் என்ற சந்தோசத்திலும், ஓடோடி வந்து அங்கு வைக்கப்பட்டிருந்த 100 மாவீரர்களின் புகைப்படங்கள் ஒவ்வொன்றையும், உற்றுப் பார்த்து வந்தவேளையிலும் தனது மகனின் புகைப்படம் இல்லாமலிருந்தது குறித்த தாய்க்கு மிகவும் மேலும் வேதனையை ஏற்படுத்தியது.
தனது மகன் வீரச்சாவடைந்து விட்டார் என்பதை உறுத்திப்படுத்தும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனால் குறித்த தாய்க்கு வழங்கப்பட்டிருந்த ஆவணங்கள் ஒவ்வொன்றாக எடுத்துக் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி, மற்றும், அக்கட்சியின் மட்டு அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் நா.நகுலேஸ், ஆகியோரிடம், கண்ணீர் மல்க காண்பித்தார்.
அதில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் அக்குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்த உதவி வழங்கு அட்டை, அவ்வியக்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கிப் புத்தகம் போன்ற பல ஆவணங்கள் இருந்தன.
குறித்த தாயின் வேதனையும் ஆதங்கமும் அங்கிருந்த பலரது கண்களில் கண்ணீரை வரவழைத்திருந்ததுடன், அவரது மகனது புகைப்படத்தினை விரைவில் தேடிக்கண்டு பிடித்து தருவதாக ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி உள்ளிட்ட முன்னாள் போராளிகள் அவருக்கு ஆறுதல் கூறி வழியனுப்பி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad